ஒரு மனிதனுக்கு 4 மணி நேரம் தூக்கம் போதுமா? ஆய்வில் வெளியான தகவல்
புதிதாக எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் மனிதன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூங்கினால் போதுமானது என்று கூறப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கம்
பொதுவாக ஒரு மனிதன் குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று தான் மருத்துவர்கள் கூறுவார்கள்.
அதிகமாக மற்றும் குறைவான தூக்கம் உடல் நோய்க்கான அறிகுறிகள் என்று கூறப்படும் நிலையில், இவ்வாறு இல்லாமல் சராசரியாக ஒரு நாளைக்கு 7 அல்லது 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது பொதுவான விதியாக இருக்கின்றது.
தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் முதல்நாள் நன்றாக தூங்கி எழுந்தால் மட்டுமே புதிதாக வரும் மறுநாளில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அன்றைய தினத்திற்கான வேலைகள், உடல் உழைப்பு, சரீர சுகம் என அனைத்தும் நன்றாகவே இருக்கும். தூக்கம் ஒரு மனிதனுக்கு குறைந்துவிட்டால் பல வியாதிகள் சாதாரணமாக நுழைந்துவிடும். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில் நபர் ஒருவருக்கு 4 மணி நேர தூக்கம் போதுமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கம் வருவதில்லை என்றும் இரவில் மிக குறைந்த நேரம் தூங்கும் பலருக்கு இந்த ஆய்வு முடிவு ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது .
ஆனால் அதே நேரத்தில் அவரவர் வயதுக்கு ஏற்ற வகையில் உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற அளவில் ஓய்வு அவசியம் என்றும் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்விற்கு சரியான தூக்கம் அளவு என்பது இன்றியமையாதது என்றும் கூறப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |