ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மிர்தானியா சூப்... எப்படி செய்வது?
பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை ஒரே தடவையில் கொடுக்கும் ஒரு நிறந்த பானம் தான் சூப்.
இதனை பல வகைகளில் பல வகையான பொருட்களை கொண்டு தயார் செய்ய முடியும். மேலும் சிறியவர்கள் பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் உகந்தது.
சமைத்து சாப்பிடும் உணவுகளை விட உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் ஆகிய அனைத்தையும் எளிமையாக பெற்றுக்கொள்ள சூப் மிகச்சிறந்த மூலமாகும்.
உணவு உற்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளர்களுக்கும் மற்றைய உணவுகளை விடவும் சூப் அதிக சக்தியை வழங்கக்கூடியது.
அப்படி ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மிர்தானியா சூப் எளிமையாக முறையில் எப்படி செய்யலம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி அளவு
பூண்டு - 4
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
வெண்ணெய் -2 தே.கரண்டி
தண்ணீர் - 300 மி.லி
கறிமசாலா தூள்-2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கறிவேப்பிலை,கொத்தமல்லி, நறுக்கிய பூண்டு , நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தே.கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் 300 மி.லி அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதனுடன் 2 தே.கரண்டி கறி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்கவிட்டு வடிக்கட்டினால் அசத்தல் சுவையில் மிர்தானியா சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |