மூன்றே நாட்களில் வெள்ளையாகணுமா? அப்போ இந்த பேக் போடுங்க.. தீர்வு நிச்சயம்
பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டாலே நம்முடைய உடம்பு அதிகமாக வியர்க்கும்.
இதனால் அதிகமான தலைவலி, வறண்ட சருமம், வியர்வை துர்நாற்றம் என பல பிரச்சினைகள் ஏற்பட்டு முக அழகே போய் விடும்.
சருமம் காலப்போக்கில் கருமையடைய ஆரம்பிக்கும். இதனால் என்ன செய்தாலும் சிலர் கோடைக்காலங்களில் கருப்பாகவே தான் இருப்பார்கள்.
என்ன தான் சன்ஸ்க்ரீன் போட்டாலும் சிலரின் கை, கால்கள் கருமையடையும்.
அந்த வகையில் இந்த கருமையை எவ்வாறு போக்குவது தொடர்பில் தொடரந்து தெரிந்து கொள்வோம்.
மூன்றே நாளில் வெள்ளையாக சில டிப்ஸ்
1. புளித்த தயிர்
வெயிலில் சென்று வீடு திரும்பும் போது கருமை இருந்தால் உடனடியாக புளித்த தயிரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் கருமை நீங்கி முகம் பிரகாசமடையும்.
மேலும் தயிர் இருந்தால், அதனுடன் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழைத்து முகம், கழுத்து, கை, கால் பகுதி முழுக்க தடவி 30 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பின்னர் சுத்தமான நீரினால் கழுவி விடுங்கள். இதனால் கால், கையிலுள்ள கருமையும் தடம் தெரியாமல் மறையும்.
2. தக்காளி
பொதுவாக தக்காளியில் ஆன்டி ஆக்சிடண்ட், தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கருப்பாக இருப்பவர்கள் தினமும் ஒரு தக்காளியை இரண்டாக பிளந்து அதனை கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் காலப்போக்கில் நல்ல பலன் கிடைக்கும். இதனை தொடர்ந்து வரண்ட சருமம், எண்ணெய் தன்மை, என அனைத்து பிரச்சினைகளை இது தீர்வு தரும்.
3. பாசிப்பருப்பு மாவு
கருமை போக்குவதற்கு பெண்கள் காலங்காலமாக பயன்படுத்தும் அழகு சாதனங்களில் இதுவும் ஒன்று. வெயில் காலம் வந்து விட்டால் கடைகளில் பாசிப்பருப்பு மாவிற்கு பஞ்சம் வந்து விடும். இதனை தனியாக பயன்படுத்துவதை விட தேன், கற்றாழை கலந்து பயன்படுத்தினால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். இரண்டே வாரங்களில் முகம் பளபளப்பாக மாறும்.
4. வெள்ளரிக்காய்
கோடைக்காலம் என்றால் வெள்ளிரிக்காயிற்கு பஞ்சம் தான். இதனை வைத்து உடல் சூட்டை மட்டுமல்ல சரும பிரச்சினைகளையும் சரிச் செய்யலாம். ஏனெனின் வெள்ளரிக்காய் வைட்டமின் ஏ, பி1 போன்ற சத்துக்களை நிறைத்திருக்கிறது.
இது உடலுக்கு நீர்ச்சத்து தரும் உன்னத பொருள். இதனால் சருமம் வரட்சியடையாது. அந்த வகையில், வெள்ளரிக்காயை நீர் விடாமல் அரைத்து சாறாக்கி அதை காட்டன் கொண்டு முகம், கழுத்து கை, கால் பகுதியில் தடவியபடி வந்தால் சருமத்தின் சன் டேன் மாறும். வாரத்துக்கு மூன்று முறை செய்தாலே போதும்.
5. ஆரஞ்சு சாறு
கோடைக்காலங்களில் சருமங்களில் நீர்சத்து குறைந்து விட்டால் முகம் சற்று வரட்சியாக இருக்கும். அப்போது நீர்ச்சத்துகள் தரும் பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சருமத்திற்கு கண்டிப்பாக வைட்டமின் சி சத்து தேவை. இதனை நாம் ஆரஞ்சு சாற்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.