வெயிலால் உங்க சருமம் கருத்துவிட்டதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
கோடைகாலம் என்றாலே நமக்கு அதிக தொல்லையான ஒரு காலம் தான். இதற்குக் காரணம், கோடை காலத்தில் வெளியில் செல்லும்போது நம் மீது படும் சூரியக் கதிர்களால் நமது தோல் கருப்பாகி விடுகின்றது.
பகல் வேளைகளில் நாம் வெயிலில் நிற்கும்பொழுதுஈ, நாம் ஆடைகள் அணிந்த ஒரு நிறமாகவும் வெயில் பட்ட இடங்கள் ஒரு நிறமாகவும் மாறிவிடுகின்றது.
image - firstderm
அதில் தோல் உரிதல், எரிச்சல், அரிப்பு போன்றனவும் ஏற்படுகின்றன. சரி இனி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இவற்றை எவ்வாறு சரி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேன்/எலுமிச்சை
ஒரு கிண்ணத்தில் ஒரு கரண்டி தேன் எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். இதை நன்றாக பேஸ்ட் போல் செய்துகொண்டு, தோலில் தேய்த்து அரைமணி நேரம் அப்படியே விடவும்.
தக்காளி
ஒரு தக்காளியை எடுத்து பேஸ்ட்போல் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை தோலில் தடவி 15 நிமிடங்கள் விட்டு, பின்னர் முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை
ஜெல் கற்றாழை ஜெல், ஒலிவ் ஒயில் என்பவற்றை முகம், கை, கழுத்து என்பவற்றில் தடவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.
image - women's health