நெற்றியில் கருமை இருந்தால் இதை ட்ரை பண்ணுங்க
என்னதான் சிவந்த நிறமுடையவர்களாக இருந்தாலும் சிலருக்கு உடலின் சில பாகங்கள் மட்டும் கருமையாக காணப்படும். குறிப்பாக, முழங்கைகள், கழுத்துப் பகுதி, முழங்கால்கள்.
ஏன் இந்த பாகங்கள் மாத்திரம் கருமையாக இருக்கின்றது? இதற்கு என்ன செய்யலாம் என சிலருக்கு கவலையாக இருக்கும்.
அதேபோல் ஒரு சிலருக்கு நெற்றியில் கருமை இருக்கும். இதை போர் ஹெட் டைனிங் என்று கூறுவார்கள்.
முகத்தில் ஏதேனும் வித்தியாசமாக இருந்தால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். இதை நிவர்த்தி செய்வதற்கு, பாலில் மஞ்சளைக் கலந்து கருமை நிறம் உள்ள இடத்தில் சிறிது நேரம் தடவிவிட்டு, பின்பு நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் படிப்படியாக கருமை மறைந்துவிடும்.
வெள்ளரிக்காயையும் சிறு துண்டாக வெட்டி கருமையுள்ள இடத்தில் மசாஜ் செய்து பின்பு மகத்தை கழுவ வேண்டும். இதுவும் கருமைக்கு சிறந்ததொரு தீர்வைக் கொடுக்கும்.