வாட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட சாட்களை திரும்ப பெற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
வாட்ஸ்அப்பில் இருந்து நீக்கப்பட்ட சாட்களை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ் அப்
இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.
இதற்கு வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கின்றது. தற்போது வாட்ஸ் அப்பில் தெரியாமல் சாட்களை அழித்துவிட்டால் அதனை எவ்வாறு மீட்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
எவ்வாறு மீட்கலாம்?
வாட்ஸ்அப் அமைப்புகளில் backup file இயக்கியிருந்தால், உங்கள் சாட்கள் அவ்வப்போது கூகிள் டிரைவ் (ஆண்ட்ராய்டு) அல்லது ஐக்ளவுட் (iOS)-ல் சேமிக்கப்படும். அதில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் தொலைபேசியில் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து அதை மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்
செயலியைத் திறந்து உங்கள் எண்ணைக் கொண்டு உள்நுழையவும்.
வாட்ஸ்அப் இப்போது backup file-ஐ மீட்டெடுக்கச் சொல்லும். இங்கே 'Restore' என்பதைத் தட்டவும்.
backup file -ல் இருந்து எடுத்தவுடன் உங்கள் பழைய சாட்கள் வாட்ஸ்அப்பில் திரும்ப வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |