கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல்... எப்படி செய்யனும்னு தெரியுமா?
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
விழிஞ்சம் சிக்கன்
பொதுவாக உணவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சைவம் மற்றொன்று அசைவம். ஆனால் நம்மில் பலர் அசைவ உணவுகளையே தான் அதிகமாக விரும்புவோம்.
வீட்டு விசேஷங்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் என அனைத்திற்கும் அசைவ உணவுகளையே விருந்தாக வைக்கின்றனர். அந்த வகையில் சிக்கன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
நாம் நம் வீடுகளில் சிக்கன் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் சுக்கா போன்றவற்றை தான் சாப்பிட்டிருப்போம். .ஆனால் அதை விட சிறந்ததான கேரளா விழிஞ்சம் சிக்கன் எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.

தேவையான பொருட்கள்:
அரை கிலோ எலும்புள்ள சிக்கன்
பொரிக்க தேங்காய் எண்ணெய் மேரினேட் செய்ய: -
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1 ஸ்பூன் உப்பு
½ எலுமிச்சை
விழிஞ்சம் மசாலா செய்ய:
10 சின்ன வெங்காயம்
நறுக்கிய அரை கப் கொத்தமல்லி
நறுக்கிய கால் கப் புதினா
கால் கப் கறிவேப்பிலை
1 நறுக்கிய பச்சை மிளகாய்
12 பூண்டு பல்
2 இன்ச் இஞ்சி
1 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் சோம்பு
1 ஸ்பூன் மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி அதில் உப்பு, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், மஞ்சள் துள் மற்றும் கரம் மசாலா சேர்த்து ஊற வைக்கவும்.
விழிஞ்சம் செய்ய கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு நாம் ஊற வைத்த சிக்கனில் குறித்த மசாலாவைச் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சிக்கனை நன்றாக பொரித்து எடுக்கவும்.
பிறகு சிக்கனில் உள்ள எண்ணெயை தனியாக எடுத்துவிட்டு சிக்கனை மட்டும் சாப்பிட்டால் சுவையான கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெடி.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |