சன்டே ஸ்பெஷல் காரசாரமான சிக்கன் ஊறுகாய்! இப்படி செய்து அசத்துங்க!
பொதுவாகவே எல்லா வீடுகளிலும் ஒரு ஊறுகாய் பிரியராவரு நிச்சம் இருப்பார். இவர்களுக்கு எத்தனை குழம்பு செய்தாலும் சிறிது ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தியே உண்டாகும்.
மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய் என பல வகையில் ஊறுகாய் இருந்தாலும், சிக்கன் ஊறுகாய்க்கு டஃப் கொடுப்பது சற்று கடினம் தான்.

அப்படி வீட்டில் உள்ள அனைவரையும் குஷியாக்கும் வகையில், காரசாரமான சுவையில் சிக்கன் ஊறுகாய் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்புகள் இல்லாத சிக்கன் -300 கிராம்
மஞ்சள் தூள்- 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள்- 1 தே.கரண்டி + 1 தே.கரண்டி
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணை - 1/4 கப் + சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி

வறுத்து அரைக்க...
கடுகு -1/2 தே.கரண்டி
வெந்தயம்- 1/2 தே.கரண்டி
சீரகம்- 1 தே.கரண்டி
மல்லி -1 தே.கரண்டி
பட்டை- சிறிய துண்டு
ஏலம் -3
கராம்பு- 3
அன்னாசிப்பூ - 1

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் அப்படியே ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரையில் வறுத்து ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும், 1/4 கப் நல்லெண்ணை சேர்த்து ஊறவைத்த சிக்கனை போட்டு பொறுமையாக கோல்டன் பிரவுன் நிறத்துக்கு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதே நல்லெண்ணையுடன் இன்னும் சிறிதளவு சேர்த்து, அதில் 1 தேக்கரண்டி மிளாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி பின்னர் பொரித்த சிக்கனையும் அதனுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
அதனையடுத்து அரைத்து வைத்த மசாலா தூளையும் அதனுடன் சேர்த்து உயர் தீயில் நன்றாக வேவிட வேண்டும்.
இறுதியா எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் அருமையான சுவையில் சிக்கன் ஊறுகாய் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |