ஒருதடவை முட்டையை உடைத்து ஊற்றி குழம்பு செய்து பாருங்க! சுவை அட்டகாசமாக இருக்கும்
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு எவ்வாறு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பெண்களுக்கு தினமும் ஒரு பிரச்சனை என்னவென்றால் என்ன குழம்பு வைப்பது என்ற கேள்வி அதிகமாகவே இருக்கும்.
அவ்வாறு வீடுகளில் வைக்கும் குழம்பில் அசைவம் என்றால் சிக்கன், மட்டன், மீன், முட்டை குழம்புகள் தோன்றும். முட்டையை சாதாரணமாக அவித்து குழம்பு வைக்காமல் சற்று வித்தியாசமாக வைக்கலாம்.
அதாவது முட்டையை உடைத்து ஊற்றி எவ்வாறு முட்டை குழம்பு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன் *
கசகசா - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 3
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கல்பாசி - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 10 பல் (நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
அரைத்த மசாலா
தண்ணீர் - தேவையான அளவு
முட்டை - 4
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். பின்பு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, கல்பாசி, கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு இதனுடன் வெங்காயத்தினை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் மஞ்சள் தூள், மட்டன் மசாலா, மல்லித் தூள், காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, குழம்பிற்கு தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்த பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 3 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |