மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு பகவான்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!
ஜோதிடத்தில் நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாகக் கருதப்படுபவர் குரு பகவான். தேவர்களின் குருவான இவர், ஆண்டுக்கு ஒருமுறை ராசியையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கை. தற்போது கடக ராசியில் பயணிக்கும் குரு பகவான், இந்த ஆண்டு அதிசாரமாக வேகமாக நகர்வதால், அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து மகம் நட்சத்திரத்திலும் பிரவேசிக்கவுள்ளார்.

குரு பகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரம் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அப்படி மகம் நட்சத்திரத்தில் 2027 ஜனவரி 25ஆம் தேதி வரை பயணிக்கும் குருவால் தொழில் மற்றும் நிதி ரீதியாக உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமான மாற்றங்களைத் தரும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், அவருடனான உறவும் வலுப்படும்.
பணியிலும் தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேற வாய்ப்புள்ளது. நீண்டகால உடல்நலப் பிரச்சனைகள் குறையும். இருப்பினும், திடீர் மாற்றங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம்

குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைத் தரும். கேதுவின் அமைப்பால் இதுவரை சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தி, தனித்த அடையாளத்தை உருவாக்குவீர்கள். நடிப்பு, ஊடகம், அரசியல், சமூக சேவை போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
திருமணமாகாதவர்களுக்குத் திருமண வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். இருப்பினும், உடல்நலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவாகும்.
துலாம்

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தையும், முன்னேற்றத்தையும் தரும். நீண்டகாலப் பிரச்சனைகள் தீர்ந்து, வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும்.
பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்கவும், முதலீடுகள் மூலம் லாபம் பெறவும் வாய்ப்புள்ளது.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்டகால ஆசைகள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |