வயிற்றுக் கொழுப்பை கடகடவென குறைக்கணுமா? வெறும் வயிற்றில் இதை கட்டாயம் குடிங்க
வயிற்று கொழுப்பை குறைக்கும் பானத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பலரும் தொப்பையால் அவதிப்பட்டு வரும் நிலையில், அதனை குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் உடம்பில் சேரும் கெட்ட கொழுப்பினால் மிகப்பெரிய உடல்நலக் குறைபாடு ஏற்படுகின்றது. இவை சில தருணங்களில் உயிரையும் பறிக்கும் நிலையில் உள்ளது.
அதாவது நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வருவதுடன், பல சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றது.
ஆதலால் இன்று பலரும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இதற்காக உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவுப் பழக்கத்தில் மாற்றத்தினை கொண்டு வருவது என்று முயற்சித்து வருகின்றனர்.
தற்போது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தயாரிக்கும் ஆரோக்கியமான பானத்தை குறித்தும், இதனால் வயிறு கொழுப்பினை குறைக்கவும் செய்கின்றது.

சீரகத் தண்ணீர்
சீரகத்தினை இரவு தூங்கும் முன்பு தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதனை கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் காபி, டீ இவற்றிற்கு பதிலாக குடிக்கவும்.
இதனால் செரிமானம் மேம்படுவதுடன், பசி கட்டுப்படுத்தப்படுகின்றது. மேலும் ரத்த சர்க்கரை அளவும் சீராகவும், உடலில் உள்ள கொழுப்பையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

எலுமிச்சை இஞ்சி நீர்
சிறிதளவு இஞ்சியை தட்டி எடுத்து அதனை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து அதனை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
இவற்றினை வெறும் வயிற்றில் குடிப்பதால் செரிமான நொதி தூண்டப்படுவதுடன், வாயு பிரச்சனை குறைந்து, வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்குமாம்.

க்ரீன் டீ
உடல் எடையைக் குறைக்கும் முக்கிய பானமாக க்ரீன் டீ இருக்கின்றது. க்ரீன் டீ கொழுப்பு எரிப்பதை அதிகரிப்பதுடன், இதில் உள்ள கேட்டசின்கள் கொழுப்பை எளிதாக எரிக்க உதவுகின்றது.
ஆதலால் தொப்பை மற்றும் உடல் பருமன் குறையுமாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பால் கலந்த டீ-க்கு பதிலாக க்ரீன் டீயைக் குடித்து வந்த எடையை குறைக்கலாம். உணவிற்கு பின்பும் எடுத்துக் கொள்ளலாம்.

சோம்பு நீர்
சூடான நீரில் சோம்பு கலந்து அதனை சிறிது நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி காலையில் குடித்து வரவும்.
இவ்வாறு வெறும்வயிற்றில் குடிப்பதால் செரிமானம் மேம்படுவதுடன், வயிறு உப்புசம் மற்றும் நீர் கேத்தினையும் குறைக்க முடியும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

மஞ்சள் பால்
மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இவை உடலினுள் அலற்சி மற்றும் வீக்கத்தினை குறைப்பதுடன், கொழுப்பு சேமிப்பை ஒழுங்குபடுத்துகின்றது.
ஆகவே கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் மஞ்சள் கலந்த பாலை இரவு தூங்கும் முன்பு குடித்து வந்தால் நல்ல தூக்கம் கிடைப்பதுடன், நச்சுக்களும் நீங்குமாம்.

மோர்
அதிகப்படியான கலோரிகள் இல்லாமல் உடலை நீரேற்றத்துடன் வைப்பதற்கு மோர் உதவி செய்கின்றது. மேலும் செரிமானத்தினை மேம்படுத்தவும், எடை இழப்பிற்கும் உதவுகின்றது.
இதிலுள்ள புரோட்டீன் வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதால் பசி கட்டுப்படுத்த முடிகின்றது. ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு டம்ளர் மோர் குடியுங்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |