ஓவன் இல்லாமல் வீட்டிலேயே வாழைப்பழ கேக் எப்படி செய்வது?
குழந்தைகளுக்கு பிடித்த கேக் வகைகளில் ஒன்றான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு பேக்கரி கடைகளில் விற்கப்படும் கேக் வகைகள், நொறுக்குத்தீனிகள் என்றால் அவ்வளவு பிரியம்.
இதனை சலிக்காமல் சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் கேக் செய்வதற்கு ஓவன் மிக முக்கியமாக தேவை என்று தான் நம்மில் பலரும் நினைத்திருப்போம்.
இங்கு வாழைப்பழ கேக் ஓவன் இல்லாமல் வீட்டிலேயே மிக எளிமையாக எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
2 பழுத்த வாழைப்பழங்கள்
1 கப் மாவு
1/2 கப் சர்க்கரை
1/2 கப் பால்
1/2 கப் எண்ணெய் அல்லது வெண்ணெய்
1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ்
நறுக்கிய உலர் பழங்கள் சிறிதளவு

செய்முறை
வாழைப்பழத்தினை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய் அல்லது பெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு இதனுடன் மசித்த வாழைப்பழம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். இதற்கிடையியே மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இவற்றினை கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.
தேவைக்கு ஏற்ப பால் மற்றும் மற்ற பொருட்களை வாழைப்பழ கலவையுடன் கலக்கவும். மாவுக்கலவை மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இல்லாமல் இருக்கவும்.

அதிகமாக கலந்தால் கேக் கடினமாகவே வரும். ஆதலால் அதிக நேரம் மாவை கலக்க வேண்டாம். அதே போன்று பேக்கிங் சோடா மற்றும் பவுடரை சரியான அளவில் பயன்படுத்தவும்.
மாவை 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்தால் இன்னும் மென்மையாக கேக் வரும். உங்களிடம் ஓவன் இருந்தால் கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவை ஊற்றி, சூடாக்கப்பட்ட ஓவனில் சுமார் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கலாம்.
அவ்வாறு இல்லையெனில் வாணலி அல்லது குக்கரை பயன்படுத்தலாம். அடிப்பகுதியில் உப்பு தூவி மிதமான தீயில் சூடாக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |