பூண்டு சட்னி ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்
இட்லி தோசைக்கு அருமையான பூண்டு சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக தென்னிந்திய மக்களின் காலை மற்றும் இரவு உணவு என்றால் அது இட்லி மற்றும் தோசையாகவே இருக்கும். இந்த உணவுகளுக்கு விதவிதமான சட்னி செய்து சாப்பிடுவார்கள்.
சில தருணங்களில் சாம்பார் வைப்பதும் உண்டு. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 10-12 (உங்கள் சுவைக்கு ஏற்ப)
பூண்டு – 10-12 பற்கள்
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
கடுகு எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

செய்முறை
சட்னிக்கு தேவையான மிளகாய் வத்தலை சுமார் 20 அல்லது 30 நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊற வைத்த மிளகாயில் சிறிதளவு தண்ணீரை வெளியேற்றிவிட்டு, இதனுடன் பூண்டு, சீரகம் மற்றும் உப்பு இவற்றினை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
தேவைக்கு தண்ணீர் தேவையெனில் ஊற வைத்த தண்ணீரை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் அரைத்த விழுதை சேர்த்து, நன்றாக கிளறவும்.
சட்னியின் பச்சை வாசனை நீங்கியதும், அதன் பின்பு அடுப்பினை அணைத்துக் கொள்ளவும். நீங்கள் இந்த சட்னியை ப்ரிட்ஜில் வைத்து சில நாட்கள் வைத்து சாப்பிட நினைத்தால் அதன் மீது நல்லெண்ணெய் ஊற்றி காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |