பாதாமை ஊறவைக்காமல் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்! ஜாக்கிரதை
பாதாம் பருப்புக்களை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதில் உடலுக்கு என்னென்ன விளைவுகளை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

பாதாம்
பாதாம் பருப்பு சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை தரும். அவற்றில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
நம்மில் பெரும்பாலோர் பாதாம் பருப்பை ஊறவைத்த பின்னரே சாப்பிடுகிறோம்.

அவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தோலுரிப்பதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கின்றன.
ஆனால், அவற்றை ஊறவைக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
பாதாம் பருப்பை ஊறவைக்காமல் சாப்பிடுவது உடலுக்கு பல ஆப்பதான விளைவுகளை கொண்டு வரும். இதை விரிவாக பார்க்கலாம்.

நன்மைகள்
செரிமான பிரச்சனைகள்
- பாதாமின் பழுப்பு நிறத் தோலில் டானின்கள் என்ற சேர்மம் உள்ளது. இது அவற்றை கடினமாக்குகிறது. பாதாமை ஊறவைக்காமல் சாப்பிடுவது வயிற்றுக்கு ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கும், இதனால் சிலருக்கு வயிறு கனமாக இருப்பது போன்றோ அல்லது வாயுத் தொல்லை ஏற்படுவது போன்றோ உணர்வு வரும்.
ஊட்டச்சத்து உறிஞ்சப்படுதல் குறைதல்
- பாதாம் தோலில் பைடிக் அமிலம் உள்ளது. துத்தநாகம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களை உடல் முழுமையாக உறிஞ்சுவதைத் தடுப்பதால், இது ஒரு "ஊட்டச்சத்து எதிர்ப்புப் பொருள்" என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் பாதாம் பருப்புகளை ஊறவைக்கும்போது, இந்த அமிலம் குறைந்து, உடல் சிறந்த ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது.
உடல் சூடாக உணர்தல்
- ஆயுர்வேதத்தின்படி, உலர்ந்த பாதாம் பருப்புகள் உடலுக்கு வெப்பம் தரும் தன்மை கொண்டவை. அவற்றை ஊறவைக்காமல் அதிக அளவில் சாப்பிடுவது, உடலில் பித்தநீரை அதிகரித்து, முகப்பரு அல்லது வயிற்றுச் சூடு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- பாதாம் தோல்களில் நல்ல அளவில் ஃபிளாவனாய்டுகளும் நார்ச்சத்தும் உள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |