நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறணுமா? இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க
எல்லோருக்கும் தாம் நினைத்த படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என் வாழ்கையில் தான் நினைத்த எதுவும் நடக்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.
உண்மையில் நாம் நினைத்தபடி தான் நம் வாழ்கை இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இதுதான் உண்மை. வெறுமனே நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை.
ஆனால் நம்முடைய ஆழ்மனது எது நடக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறதோ அது கட்டாயம் நடந்தே ஆகும்.நம்மில் பலரும் இந்த ஆழ்மனதை நம்பவைக்கும் விடயத்தில் தான் கோட்டைவிட்டு விடுகின்றோம்.
உதாரணமாக உடல் நலத்தில் பிரச்சனை உள்ளது என்றால், எனக்கு இது சரியாகி விடும், இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடுவேன் என்று ஆழ்மனதை நம்ப வைத்து விட்டால், நம் உடல் பிரச்சனைகளைச் தானாக சரி செய்து விடும்.
நினைத்ததை சாதிக்கவும் கனவுகளை நினைவாக்குவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
பின்பற்ற வேண்டிய விடயங்கள்
உங்களின் ஆசைகளை தெளிவாக எழுதி வைத்து அதனை திரும்ப திரும்ப படித்துப்பார்ப்பதன் மூலம் ஆழ்மனம் நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் சக்தியை பெற்றுக்கொள்ளும்.
இலக்குகளை அடைய முதலில் அது குறித்து பயம் மற்றும் சந்தேகங்களை துளியும் இருக்க கூடாது. மேலும் நினைத்ததை முடிக்க அது சார்ந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் முயற்வியை ஒரு போதும் கைவிடவே கூடாது. எத்தனை சவால்கள் தடைகள் வந்தாலும் இலக்கின் மீது மாத்திரம் கவனம் செலுத்துவதற்கு மனதை தயார்படுத்த வேண்டும்.
பொறாமை மற்றும் கோபம் இல்லாமல் இலக்கை அடைய பொறுமையாக செயற்படவேண்டியது அவசியம். சாதனைகளை செய்வதற்கு நிச்சயமாக நீண்ட காலம் தளராத பொறுமை இருக்க வேண்டியதும் தன்னம்பிக்கை இருக்க வேண்டியதும் அவசியம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இலக்குகள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை பிரபஞ்சம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் இலக்குகளை இலகுவில் அடையலாம் என்பதே மெய்.
வாழ்வில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற இந்த விடயங்களை பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |