உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க

Cucumber Weight Loss Healthy Food Recipes
By Vinoja Apr 27, 2024 09:39 AM GMT
Report

பொதுவாக அனைவருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது மனமும் உடலும் பெரும்பாலான சமயங்களில் அதற்கு ஒத்துப்போவதில்லை.

சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்கவிட்டால், அது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Sorakkai Kootu Recipe Helps To Reduce Weight

எந்த விதமான உடற் பயிற்சியும் செய்யாமல் எளிமையான வழியில் உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால் அதற்கு சரியான தீர்வு உணவு முறையில் மாற்றத்தை கொண்டுவருவது தான்.

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை!

இந்த பழக்கங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ஜாக்கிரதை!


அந்த வகையில் உடல் எடையை இலகுவாக குறைக்க சுரைக்காய் சிறந்த தெரிவாக இருக்கின்றது. உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மற்றும் வேறு சில நோய்களையும் கட்டுப்படுத்தும் சுரக்காயை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் கூட்டு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Sorakkai Kootu Recipe Helps To Reduce Weight

தேவையான பொருட்கள் 

சுரைக்காய் - 1

பாசிப்பருப்பு - 1/2 கப்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

எண்ணெய் - 1 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

காய்ந்த சிகப்பு மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க தேவையானவை

துருவிய தேங்காய் - 3/4 கப்

அரிசி மாவு - 2 தே.கரண்டி

வரமிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

சீரகம் - 1தே.கரண்டி

செய்முறை

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Sorakkai Kootu Recipe Helps To Reduce Weight

முதலில் சுரைக்காயை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி 20  நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவைக்க வேண்டும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Sorakkai Kootu Recipe Helps To Reduce Weight

இதற்கிடையே துருவிய தேங்காய், அரிசி மாவு, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் ஆகியவற்றை  மிக்ஸி ஜாரில் ஒன்றில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

அந்த பேஸ்டை வேக வைத்திருக்கும் சுரைக்காயுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Sorakkai Kootu Recipe Helps To Reduce Weight

பின்னர் அடுப்பில் இன்னொரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் சிறிதளவு காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேண்டும்.

பின்னர் இந்த தாளிப்பை சுரைக்காயில் போட்டு கலந்து இறக்கினால் சுவையான சுரைக்காய் கூட்டு தயார். வாரம் இரண்டு முறை இந்த கூட்டு சாப்பிட்டு வந்தால் உடல் உடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி... வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி... வைரலாகும் புகைப்படங்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US