இந்த ராசி ஆண்களை காதல் செய்யும் முன் இரு முறை யோசிங்க.... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே பெண்கள் ஆண்களை விடவும் திருமணத்தின் மீது கனவுகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களை பொருத்தவரையில், தனக்கு துணையாக வரும் ஆண் பணக்காரனாக இல்லாவிட்டாலும்,தனக்கு உண்மையானவராகவும் நேர்மையானவராகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் ஏமாற்றுவதில் வல்லவர்காக இருப்பார்களாம்.
இவர்கள் பெண்களின் அப்பாவித்தனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி பெண்களை ஏமாற்றும் குணம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே காதல் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் ஒரு உறுதியான உறவில் சேர்ந்தவுடன் காதல் உணர்வு குறைய ஆரம்பித்துவிடும். இவர்கள் புதிய புதிய அனுபவங்களை விரும்புவதன் காரணமாக இவர்கள் நிலையான காதல் உறவில் நிலைத்து நிற்க மாட்டார்கள்.
இவர்களின் இந்த குணம் அதிக விசுவாசமும், நேர்மையும் கொண்ட பெண்களுக்கு வலியை கொடுக்கக் கூடும். இந்த ராசி ஆண்களை காதல் செய்யும் முன்னர் சற்று சிந்தித்து செய்ல்பட வேண்டும்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் உணர்வுகளை அவ்வளவு எளிதில் யாருடனும் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் முடிவெடுக்க முடியாதவர்களாக இருக்கலாம், எனவே அவர்கள் விருப்பங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் காதல் விடயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.
மிதுனம் அவர்கள் எல்லாவற்றையும் விரும்பினால் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் யாருடனும் பலக மாட்டார்கள். ஆனால் இவர்களின் விருப்பங்கள் மாறும் போது தானாவே அந்த உறவில் இருந்து வெளியேறிவிடுவார்கள்.
மகரம்

மகரம் ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் மிகவும் குறிப்பிட்ட ஒன்றைத் தேடுகிறார்கள்.முடிந்தவரை தங்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் உறுதியாக இருக்கும்.
இவர்கள் காதல், மோகம், பாசம், நட்பு என அனைத்தையும் ஒருவரிடம் எதிர்பார்ப்பது இவர்களின் மிகப்பெரும் குறைப்பாடாக இருக்கலாம். ஏனெனில் இவை அனைத்தையும் ஒரு துணையிடம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம்.
இவர்களின் இந்த தேடல் காரணமாக வாழ்க்கைப்பயணத்தில் பலரை ஏமாற்றக்கூடும். இவர்களுக்கு மிகவும் கிடித்தது கிடைக்கும் வரையில், அவர்களின் தெரிவுகள் மாறிக்கொண்டே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |