Kudal Kuzhambu: கிராமத்து சுவையில் ஆட்டு குடல் குழம்பு... ஹோட்டல் சுவையே தோற்றுப்போயிடும்
அசைவப் பிரியர்களுக்கு இட்லி, சாதத்திற்கு விரும்பி சாப்பிடும் ஆட்டு குடலை எவ்வாறு கிராமத்து ஸ்டைலில் குழம்பு வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைப்பதற்கு
எண்ணெய் -
கிராம்பு - 7
ஸ்டார் பூ - 2
பட்டை - 4 துண்டு
சோம்பு - ஒரு ஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகச - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
தேங்காய் - ஒரு மூடி (துருவியது)

குழம்பு செய்வதற்கு
ஆட்டுக்குடல் - ஒன்று (ஓரு ஆடுக்குடல்)
எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரியாணி இலை - 2
பெரியவெங்காயம் - 3
கிராம்பு - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை ஸ்பூன்
கறிவேப்பிலை - கொத்து

புதினா இலை - 6 இலை
தக்காளி - 3 (அரைத்தது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் விட்டு அதில் வறுப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், பிரியாணி இலை சேர்க்கவும். தொடர்ந்து பெரியவெங்காயம், கிராம்பு, இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை, புதினா இவற்றினை சேர்த்து வதக்கவும்.

பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் குடலையும் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும். குடல் நன்றாக சுருண்டு வதங்கிய பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்க்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக கிளறிவிட்ட பின்பு மஞ்சள், மல்லி, மிளகாய், கரம்மசாலா ஆகிய பொடிகளை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
பின்பு ஒன்றரை டம்ளர் தண்ணீர் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்க்கவும். கடைசியாக உப்பு சேர்த்து குக்கரை மூடிபோட்டு 6 விசில் விட்டு எடுத்தால் சுவையான குடல் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |