அரிசி மா இல்லாமல் பூ போன்ற இடியாப்பம் செய்யலாம்!
தென்னிந்தியா உணவுகளில் பிரபலமானது தான் இடியாப்பம் அல்லது நூல் புட்டு அல்லது நூலாப்பம். இது அரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படுகிறது.
சில சமயங்களில் வீடுகளில் அரிசி மா இல்லாவிட்டால் இடியாப்பம் செய்ய முடியுமா?என்ற கேள்வி எழும். ஆம், அரிசி மா இல்லாவிட்டாலும் கோதுமை மாவை பயன்படுத்தி இடியாப்பம் செய்யலாம்.
இந்தியா, இலங்கை, தெற்காசியா முழுவதிலும் பிரபலமான உணவு. இது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இடியாப்பம் குழம்பு பிரபலமான பாரம்பரிய உணவாகும்.
இடியாப்பம் என்ற வார்த்தை தமிழ் மற்றும் மலையாள மொழியில் இருந்து உருவாகியது. இதற்கு பாயா அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறலாம்.

அந்த வகையில், அரசி மா இல்லாமல் எப்படி அதே பதத்திற்கு இடியாப்பம் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மா - 300 கிராம்
- உப்பு- தேவையான அளவு
- சுடுநீர்- தேவையான அளவு
- எண்ணெய்- கொஞ்சம் இடியாப்பம்
செய்வது எப்படி?
முதலில் இடியாப்பத்திற்கு தேவையான அளவு கோதுமை மாவை எடுத்து ஒரு கார்ட்டன் துணியில் சுற்றி, நீராவியால் அவித்து கொள்ளவும். மா அவிந்து கொண்டிருக்கும் சமயத்தில் நீங்கள், இடியாப்பத்திற்கு தேவையான குழம்பை ஒரு பக்கம் தயார் செய்யலாம்.

அதன் பின்னர் மாவை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, சூடு இறங்கும் வரை வைத்திருக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, இடியாப்பம் மாவை பிசைந்து கொள்ளவும்.
அடுத்து, ஒரு இட்லி தட்டில் இடியாப்பம் மாவை பிழிந்து விடவும். தட்டு இல்லாதவர்கள் வாழை இலைகள் கூட பெரிய இடியாப்பமாக பிழிந்து எடுக்கலாம்.

5 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால், பூ மாதிரியான இடியாப்பம் தயார்! வெள்ளையாக இருக்கும் இடியாப்பம் கோதுமை மாவில் செய்யும் பொழுது கொஞ்சம் மஞ்சள் நிறமாக இருக்கும். சுவையும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |