முள்ளங்கி சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா? ரெசிபி இதோ!
இட்லி தோசைக்கு சுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் நாள்தோறும் இட்லி மற்றும் தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி வகைகளை வைத்து சாப்பிடுவது என்பது சில தருணங்களில் எரிச்சலை ஏற்படுத்திவிடுகின்றது.
பொதுவாக முள்ளங்கியை சாம்பார் மற்றும் கூட்டு இவற்றிற்கு பயன்படுத்தப்படும் நிலையில், இதனை வைத்து சட்னி வைக்கவும் செய்யலாம். அது எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய முள்ளங்கி - 2 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
மல்லி விதை - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை
முள்ளங்கி சட்னி செய்வதற்கு முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைபருப்பு, மல்லி விதை, பழுண்டு, வரமிழகாய் இவற்றினை போட்டு வதக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். அதில் முள்ளங்கியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். முள்ளங்கி சற்று வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தட்டில் குறித்த கலவையை கொட்டி ஆற வைக்கவும்.
அவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் அவற்றை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்து பரிமாறினால் அட்டகாசமான சுவையில் முள்ளங்கி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |