உருளைக்கிழங்கில் முறுக்கு செய்யலாமா? அட்டகாசமான சுவையில் இதோ
உருளைக்கிழங்கு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்றாகும்.
இதுவரை கேள்விப்படாத ஒன்று தான் உருளைக்கிழங்கு முறுக்கு. மிகவும் எளிமையாக தயார் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு- 2 கப்
உளுந்து 2 கப்
வெண்ணெய் 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு- 2
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை மிதமாக தீயில் நன்கு வறுத்துவிட்டு, பின்பு மாவாக அரைத்துக் கொள்ளவும். பின்பு உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், உப்பு, உருக்கிய வெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
தொடர்ந்து அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுடு படுத்தி, முறுக்கு அச்சின் உதவியுடன் முறுக்காக போடவும்.
அச்சி பயன்படுத்தாதவர்கள், கைகளால் கூட முறுக்கு சுற்றிக்கொள்ளலாம். பின்பு நன்கு பொரித்து எடுத்தால் உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |