Chicken Curry: காரசாரமாக கொங்கு நாட்டு சிக்கன் கிரேவி! ஒருமுறை சமைத்து பாருங்க
அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கன் கிரேவி கொங்கு நாட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 40
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் வத்தல் - 7
கறிவேப்பிலை - 2 கொத்து
image: istock
வறுத்து அரைப்பதற்கு
தனியா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 5
ஏலக்காய் - 1
ஸ்டார் பூ - பாதி
ஜாதிபத்ரி - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு அதில் சிறிதளவு உப்பு, சிறிது மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாய் ஒன்றில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் வறுத்து நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும்.
மீண்டும் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, அதில் கிள்ளி வைத்திருக்கும் வரமிளகாயை சேர்க்கவும்.
பின்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து சின்னவெங்காயம், பெரியவெங்காயம் இவற்றினை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பின்பு சிக்கனை அதினுடன் சேர்த்து 7நிமிடத்திற்கு வதக்கவும்.
தொடர்ந்து தக்காளி சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியாக கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கறியில் சேர்த்தால் காரசாரமான கொங்கு நாட்டு ஸ்பெஷல் சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |