உங்க போன்ல இன்டர்நெட் speed ரொம்ப குறைவாக இருக்கா? அப்போ இத பண்ணுங்க
சில சமயங்களில் Smartphone பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து விடும்.
இது சிலருக்கு எரிச்சல் உணர்வை துண்டும். என்ன தான் high speed data plans போட்டாலும், அடிக்கடி Smartphone-ல் வேகம் குறைந்து விடுகிறது என்றால் அதில் கவனம் செலுத்து வேண்டும்.
இதற்கு network coverage தான் காரணம் என நம்மிள் பலர் தவறாக புரிந்து கொள்வார்கள். மாறாக அதற்கு நிறைய தொழில்நுட்ப காரணங்கள் உள்ளன.
அந்த வகையில், Smartphone-களில் வேகம் குறைவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதனையும், அதனை எவ்வாறு சரிச் செய்யலாம் என்பதனையும் பார்க்கலாம்.
வேகம் குறைவதற்கான காரணங்கள்
1. Smartphone-களில் Internet speed குறைவாக உள்ளது என்றால் உங்களுடைய Smartphone-ல் smartphone settings சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதனை சரிச் செய்தால் வேகம் அதிகரிக்கும்.
2. வேகமாக இணைய சேவையை வழங்கினாலும், Smartphone-ல் உங்களுக்கே தெரியாமல் சில Files சேமிக்கப்பட்டிருக்கும். இதுவே வேகத்தை குறைக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
3. Smartphone> Settinga menu> (Mobile Network என்ற ஆப்ஷன் இருக்கும் அதன் உள்ளே சென்று data saver என்ற விருப்பத்தை கிளிக் செய்து, டேட்டா சேவர் அம்சம் ON நிலையில் இருக்கிறதா? என்பதை சரி பார்த்து, ON-ல் இருந்தால், அதனை OFF செய்ய வேண்டும்.
4. Smartphone> Google chrome browser-ஐ கிளிக் செய்து அங்கு அதிகமாக பயன்படுத்தும் வெப் பிரவுசரை (web browser) திறந்து, அதன் மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்யவும். அதன் பின்னர், Settings> Site Settings> Storage or டேட்டா ஸ்டோர்டு Data stored என்ற விருப்பத்தின் உள்ளே செல்லவும். அங்கு Clear all data எனக் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தால் வேகம் அதிகரிக்கும்.
5. Google chrome browser, திறந்தால் அங்கு வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யவும். அதன் பின்னர் setting> Sync On என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும். அப்போது ஆப்ஷன் ஆஃப் (OFF) நிலைக்கு மாறிவிடும். இப்படி செய்தால் உங்களுடைய Smart phone வழக்கத்திற்கு மாறாக வேகமாக வேலைச் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
