சளி இருமலை ஓட ஓட விரட்டு நண்டு ரசம்... கிராமத்து சுவையில் எப்படி செய்வது?
மழை காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கும் நண்டு ரசம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
கடல் உணவுகளில் அதிகமாக அனைவருக்கு பிடித்தது நண்டு ஆகும். கடல் நண்டு மட்டுமின்றி, வயல்களிலும் நண்டு பிடித்து சாப்பிடுவதை நாம் அவதானித்துள்ளோம்.
நண்டு ரசம் செரிமானத்திற்கு உதவியாக இருப்பதுடன், சளி, இருமல் இவற்றிற்கு நிரந்தர தீர்வும் அளிக்கின்றது. பொதுவாக ரசம் என்றாலே சளி இருமலுக்கு நல்லது தான்.
ரச வகைகளில் மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் போன்றவை இருக்கும் நிலையில், நண்டு ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4
இஞ்சி - சின்ன தூண்டு
கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் கழுவி வைத்த நண்டை சேர்க்கவும்.
பின் அதில் அறுத்து வைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். நண்டு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானது கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை நண்டுடன் சேர்த்து கலக்கவும்.
இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி பரிமாறுங்கள். சுவையான நண்டு சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |