வாழைப்பழம் சாப்பிட்டதன் பின்னர் இந்த உணவுகளை உடனே சாப்பிடாதீங்க! மீறினால் இந்த பிரச்சனை வரும்
வாழைப்பழம் எப்போதும் நமக்கு சந்தையில் இயற்கையாக கிடைக்ககூடிய ஒரு பழமாகும். இதிலிருக்கும் B6 சத்துக்கள், நம்முடைய மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக உள்ளது.
இந்த B6 சத்துக்கள்தான், செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. தினமும் நாம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.
ஆனால் இந்த பழத்தை குறித்த சில உணவுகளுடன் சாப்பிட கூடாது. அது எந்தெந்த உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உண்ண கூடாத உணவுகள்
வாழைப்பழம் உண்மையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
இதன் விளைவாக, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. எடை குறைக்க விரும்புவோருக்கு வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னதான் இதில் நிறைய பயன்கள் இருந்தாலும் இது சில உணவுகளுடன் ஒத்துவருவதில்லை.
பலரும் தனக்கே தெரியாமல் செய்யும் ஒரு தவறு பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவது இது முற்றிலும் தவறு. வாழைப்பழங்களில் இயற்கையாகவே ப்ரோட்டீன்ஸ், ஃபைபர், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி போன்ற அத்தியாவசிய மினரல்ஸ் நிறைந்துள்ளன.
இதனால் வாழைப்பழம் ஒரு சத்தான பழமாகும்.இது இரண்டையும் சாப்பிடும் போது உடலில் சேரும் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் கடினமாகி உப்புசம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
இது இரண்டையும் ஒன்றாக சாப்பிடாமல் சிறிது நேரம் கழித்து உண்பது நல்லது. அடுத்து அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் வாழைப்பழம் உட்கொள்ள கூடாது. சிலர் இறைச்சி அல்லது முட்டைகளை சாப்பிடுகிறார்கள் கூடவே வாழைப்பழங்களையும் எடுத்து கொள்கிறார்கள்.
இது செரிமானத்தில் பிரச்சனையை உண்டாக்கும். வாழைப்பழங்கள் பொதுவாக எளிதாக ஜீரணிக்க கூடியது. இதை புரத உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது செரிமான மண்டலத்தில் வாயு ஏற்படுத்த கூடும்.
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது வாழைப்பழம் உட்கொள்ள கூடாது இதனால் ரத்த சர்க்கரை அளவுகளை விரைவாக அதிகரிக்க அல்லது குறைய வழிவகுக்கும். இதனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சோர்வு மற்றும் பசி உணர்வு ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |