புளி மாத்திரம் வைத்து செய்யும் தேங்காய் துறுவல் சட்னி! 10 நிமிடங்களில் செய்யலாம்...
பொதுவாக வீடுகளில் இட்லி செய்தாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேடும் ஒரே விடயம் சட்னி தான்.
இதில் பாகற்காய், பூண்டு, தேங்காய் துறுவல் என பல பொருட்களை கொண்டு வித்தியாசமாக சுவையில் செய்வார்கள்.
அந்தவகையில் தக்காளி பழம் இல்லாமல் புளி வைத்து தேங்காய் துறுவல் சட்னி எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 7
உளுந்து - 1 1/4 மேசைக்கரண்டி
கடலைபருப்பு - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தேங்காய் துறுவல்- 1/4 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி - தேவையானளவு
உப்பு- தேவையானளவு
பெருங்காயத்தூள்- 1/4 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1/4 மேசைக்கரண்டி

செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாகியதும் தேவையானளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பின்னர் 7 காய்நத மிளகாயை எண்ணெயில் போட வேண்டும்.
இதன்பின்னர் காய்ந்த மிளகாய் சிவப்பு நிறத்திலிருந்து மாற முன்னர் கடாயிலிருந்து வெளியே எடுத்து விட வேண்டும்.
இதனை தொடர்ந்து அதே எண்ணெயில் உளுந்து, கடலைபருப்பு ஆகியவற்றை சேர்த்து நிறம் மாறும் வரைக்கும் வறுத்தெடுக்க வேண்டும். அதில் பூண்டு 6 பற்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்தெடுத்த கடலை கலவையுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் சிறிது நேரத்திற்கு பின்னர் பொன்னிறமா மாறும். அதனுடன் தேங்காய் துறுவலை சேர்த்து நன்றாக கிளரிக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் தேவையானளவு கொத்தமல்லி, உப்பு மற்றும் புளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நன்கு கலந்து விட்டு அதில் வறுத்தெடுத்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து சட்னியை கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் சட்னியில் கொட்டி நன்றாக கிளறிவிட்டால் ஆவலுடன் எதிர்பார்த்த புளி தேங்காய் சட்னி தயார்!