அல்டிமேட் சுவையுடன் ஆப்பிள் மக் கேக் செய்ய தெரியுமா?
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களில் ஆப்பிள் பழம் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த பழத்தில் உடலுக்கு தேவையான 14 சதவீதமான வைட்டமின்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதிலிருக்கும் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைய உதவுகிறது.
image - NICOLE LAMARCO
இத்தனை நிறையம்சங்களால் நிரம்பியுள்ள ஆப்பிள் பழத்தைக் கொண்டு ஆப்பிள் கேக், ஜீஸ், ஆப்பிள் சாலட் போன்ற உணவு வகைள் தயார்க்கலாம்.
அந்த வகையில் சிறுவர்கள் விரும்பி எடுத்துக் கொள்ளும் ஆப்பிள் மக் கேக் எவ்வாறு தயாரிப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தோல் நீக்கிய ஆப்பிள் பழம் - 1 கப்
வெல்லம் - 2 மேசைக்கரண்டி
பொடித்த லவங்கம் பட்டை 1/2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
காய்ச்சியெடுத்தப்பழம் - 3 மேசைக்கரண்டி
மைதா - 2 மேசை்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 1/4 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/4 மேசைக்கரண்டி
மேப்பிள் சிரப் - தேவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பவுலில் தோல் நீக்கிய ஆப்பிள்களை போட்டு, அதனுடன் வெல்லம் மற்றும் லவங்கம் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து மைக்ரோ அவனில் சுமார் 30 விநாடிகள் வைத்து எடுக்கவும்.
இதனை தொடர்ந்து கலவையை அவனிலிருந்து எடுத்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பின்னர் மேலே கேக்காக சேர்க்க வேண்டிய பொருட்களை கலந்து மீண்டும் ஒரு சில விநாடிகள் மைக்ரோ அவனில் வைத்து எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த ஆப்பிள் மக் கேக் தயார்! இதனை மேப்பிள் சிரப்பால் அலங்கரித்து பராமரித்தால் அணைவராலும் விரும்பப்படும்.
முக்கிய குறிப்பு
இந்த கேக்கை ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறலாம்.