ஒரே வாரத்துல நினைச்சபடி எடை குறைக்கணுமா? ஏழு நாள் மாதுளை சாப்பிடுங்க!
மாதுளை சுவையான, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம்.
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது.
இதில் ஆரோக்கியம் மட்டுமல்ல நம்முடைய அழகும் அடங்கியிருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரத்தையும் இந்த கட்டுரையில் காணலாம்.
எடை குறைப்பு
மாதுளையை ஏன் மக்கள் தேடிப் போகிறார்கள் என்றால், அதில் உள்ள இயற்கையான, அதிகப்படியான ஆற்றலை வழங்குகிறது என்பதால் தான்.
அத்தகைய மாதுளை நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், உடலைச் சுத்தம் செய்வதிலும் முன்னுக்கு நிற்கிறது.
அதனால் தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறி உடல் எடையை மாதுளை குறைக்கிறது. ஒரே வாரத்தில் எடைக்குறைக்க விரும்புபவர்கள் ஏழு நாட்களும் எடுத்து கொள்ளலாம்.
இதய ஆரோக்கியம்
மாதுளையில் இதயத்தைப் பாதுகாக்கும். பாலிஃபீனால்கள், டானின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கிறது.
இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து தடிப்புகள் ஏற்பட்டு, அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
இரத்த சர்க்கரை அளவு
மாதுளையில் உள்ள ப்ருக்டோஸ், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கிறது.
மேலும் ஆய்வு ஒன்றில், தொடர்ந்து இரண்டு வாரங்களாக மாதுளை ஜுஸ் குடித்து வந்தவர்களின் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
இரத்த அழுத்தம்
மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
இதில் உள்ள இயற்கையான ஆஸ்பிரின், இரத்தம் உறைவதை தடுப்பதோடு, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
புற்றுநோயை தடுக்கிறது
மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது உடலில் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் தேவையற்ற புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த வெள்ளையணுக்களை தூண்டி, கிருமிகள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
முக்கியமாக ஆண்கள் இதனை குடித்து வந்தால், புரோஸ்டேட் புற்றநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம்
மாதுளையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது, உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.
இரத்த சோகைக்கு மருந்து
இரத்த சோகை உள்ளவர்கள், மாதுளையை அன்றாடம் உட்கொண்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் மாதுளையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.
சரும ஆரோக்கியம்
மாதுளையை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.
வாய் ஆரோக்கியம்
மாதுளையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை எளிதில் எதிர்த்து போராடி, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
சூரியக் கதிர்வீச்சு
அதிகப்படியான சூரியக் கதிர்வீச்சினால் சருமம் கருமையடைவதோடு, அல்ட்ரா வைலட் கதிர்களால் பாதிக்கப்படக்கூடும்.
இதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. மாதுளையானது கதிர்வீச்சினால் உண்டாகும் சரும சேதத்தைப் போக்கும். கதிர்வீச்சு பாதிப்புகளைப் போக்கி, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
மன அழுத்தம்
குயின் மார்க்கரேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், மாதளையை தினமும் ஜூஸாகக் குடித்து வந்தால், மன அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
எவ்வளவு ஸ்ட்ரஸ்ஸோ இருந்தாலும் இந்த ஜுஸைக் குடித்தால், உடனே மன அழுத்தம் நீங்கி, உடலுக்குப் புது தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
மாதுளையை அதிகம் சாப்பிடுவது ஆபத்து....எச்சரிக்கை!
பக்கவிளைவுகள்
- மாதுளையால் ஏற்படும் அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. மாதுளையால் அலர்ஜிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் படை நோய் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும்.
- மாதுளை சில மருந்துகளுடன் குறுக்கீடு செய்து சில விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
- மாதுளை இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது, ஆனால் அனைவருக்கும் இது நல்லதல்ல.
- குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அளவுகளில் கட்டுப்பாடற்ற ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்கள் மாதுளம்பழங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- அறுவை சிகிச்சையின் போது மாதுளை சிக்கல்களை ஏற்படுத்த இதுவே காரணமாகும். நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- மாதுளம் பழம் சாப்பிடுவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிறந்த வழி மாதுளை சாப்பிடுவதுதான், ஆனால் நீங்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது.