உ டல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? காலையில் இந்த அடையை கட்டாயம் சாப்பிடுங்க
உடல் எடையை வேகமாக குறைக்கும் அடை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்களுக்கு சவாலாக இருந்து வருவது உடல் எடை தான். எடையைக் குறைப்பதற்கு பல உடற்பயிற்சி, மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.
உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகும். உணவில் சில கட்டுப்பாடுகளை வைத்தால் உடல் எடையை அசால்டாக குறைத்துவிடலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்கு காலை உணவாக அடை ஒன்றினை எடுத்துக் கொள்ளலாம். இந்த அடையை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1 கப்
துருவிய கேரட் - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
பசலைக்கீரை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - சிறிது
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
பாத்திரம் ஒன்றில் கோதுமை மாவை 1 கப் எடுத்துக் கொள்ளவும். பின்பு சீரகம், மிளகு, மஞ்சள் தூள்களையும், ஓமம் மற்று உப்பு இவற்றினையும் சேர்க்கவும்.
இதனுடன் துருவிய சுரைக்காய், கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றினை சேர்க்கவும்.
பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும், பசலைக்கீரையும் சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து அடை மாவு பதத்திற்கு பிசையவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும், அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்துள்ள மாவை அடையாக தட்டி போடவும்.
அடையை முன்னும், பின்னும் நன்றாக திருப்பிவிட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான அடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |