அடுப்பே இல்லாமல் இலங்கையின் நுங்கு பாயாசம்: ஐந்தே நிமிடத்தில் எப்படி செய்வது?

Healthy Food Recipes Sri lanka Food Recipes Summer Season
By Pavi May 14, 2025 01:12 AM GMT
Pavi

Pavi

Report

 'இயற்கை ஜெல்லி' என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். கோடைகாலங்களில் இந்த நுங்கு சாப்பிட்டால் அத உடலில் இருக்கும் சூட்டை அப்படியே இழுத்தெடுக்கும்.

மாரடைப்பு வருவதற்கான 20 முக்கிய அறிகுறிகள்...உங்களுக்கு உள்ளதா?

மாரடைப்பு வருவதற்கான 20 முக்கிய அறிகுறிகள்...உங்களுக்கு உள்ளதா?

இந்த நேரத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றத்துடனும் வைத்திருப்பது அவசியம். அதன்படி நுங்கு, இதற்கு சிறந்த உணவாக கருதப்படுகின்றது.

இலங்கையில் அதிக அளவில் நுங்கு விளைச்சல் இருக்கும். அதன்படி அடுப்பு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் எப்படி நுங்கு பாயாசம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அடுப்பே இல்லாமல் இலங்கையின் நுங்கு பாயாசம்: ஐந்தே நிமிடத்தில் எப்படி செய்வது? | Sri Lankan Nungu Payasam Recipe For Summer Food

தேவையான பொருள்கள்

  • நுங்கு - 8 பீஸ்
  • காய்ச்சி ஆற வைத்த பால் - முக்கால் லிட்டர்
  • ஏலக்காய் பொடி
  • கற்கண்டு - 30 கிராம்
  • கண்டன்ஸ்டு மில்க் - 50 மில்லி
  • குங்குமப்பூ - 2 இலை
  • முந்திரி, பாதாம் நறுக்கியது - 3 ஸ்பூன்
  • ஊறவைத்த பாதாம் பிசின் - 4 ஸ்பூன்

செய்யும் முறை

முதலில் நுங்கையின் மேல் உள்ள தோல்களை நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸியில் 5 நுங்குகளை சேர்த்து அரை டம்ளர் பால் விட்டு நன்கு மை போல பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பே இல்லாமல் இலங்கையின் நுங்கு பாயாசம்: ஐந்தே நிமிடத்தில் எப்படி செய்வது? | Sri Lankan Nungu Payasam Recipe For Summer Food

பாதாம் பிசினை 1 மணி நேரத்துக்கு முன்பு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குங்குமப்பூவையும் 2 ஸ்பூன் தண்ணீரில் ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு ஊறவிடுங்கள்.

மீதி இருக்கும்  3 நுங்குகளை பொடிப்பொடியாக நறுக்கிக் வைத்துக்கொள்ள வேண்டும்.  பின்பு கற்கண்டையும் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். 

அடுப்பே இல்லாமல் இலங்கையின் நுங்கு பாயாசம்: ஐந்தே நிமிடத்தில் எப்படி செய்வது? | Sri Lankan Nungu Payasam Recipe For Summer Food

பின்னர் அதில் அரைத்த பேஸ்ட், நறுக்கிய நுங்கு துண்டுகள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து விட்டு பின் அதில் பொடித்த கற்கண்டு, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.

கடைசியாக அதில் குங்குமப்பூ நீர் மற்றும் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்து கலந்தால் சுவையான ஜில்லுனு நுங்கு பாயசம் தயார். கடைகளில் சோடாக்களுக்கு அடிமையாகுவதை தவிர்த்து இதுபோன்ற இயற்கை பானம் அருந்தினால் ஆரோக்கியம் மேம்படும். 

புரதச்சத்து உடம்பிற்கு மிக முக்கியம் ஏன்? புரதம் நிறைந்த உணவுகள் இதோ

புரதச்சத்து உடம்பிற்கு மிக முக்கியம் ஏன்? புரதம் நிறைந்த உணவுகள் இதோ

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US