1 கப் ஜவ்வரிசி, 2 உருளைக்கிழங்கும் இருந்தாவே போதுமாம்.. மெதுமெது சப்பாத்தி செய்யலாம்
பொதுவாக வீடுகளில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வார்கள்.
வழமையாக சப்பாத்தி எனக் கூறும் பொழுது கோதுமை மாவு, மைதா மாவு இவை இரண்டிலும் தான் செய்வார்கள். இதனால் உடல் நிலை பாதிப்பு அதிகமாக வருகின்றது.
இது போன்ற பாதிப்புகளை குறைக்க வேண்டும் என்றால் சப்பாத்தியை ஜவ்வரிசியை மாத்திரம் பயன்படுத்தி செய்யலாம். இந்த ஜவ்வரிசி சப்பாத்தி சுவையாக இருப்பது மட்டுமின்றி, மென்மையாகவும் இருக்கும்.
இந்த சப்பாத்தியை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக இந்த சப்பாத்தியை வெறும் தேங்காய் சட்னியை மாத்திரம் பயன்படுத்தி சாப்பிடலாம்.
அந்த வகையில், ஜவ்வரிசி சப்பாத்தி எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* உருளைக்கிழங்கு - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கப் மாவு ஜவ்வரிசியை எடுத்து நன்றாக வறுத்து விட்டு அதனை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும். அதன் பின்னர்,தேவையான அளவு உருளைக்கிழங்குகளை எடுத்து குக்கரில் 2-3 விசில் விட்டு அவித்து கொள்ளவும்.
வெந்தவுடன் தோல் நீக்கி, உருளைகிழங்களை துருவி எடுத்து கொள்ளவும். துருவிய கிழங்கு, ஜவ்வரிசி மா, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து பிசைந்து எடுக்கவும். அதனுடன் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம்.
சப்பாத்தி மா பதத்திற்கு பிசைந்து சரியாக 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு பின்னர் பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போன்று தேய்த்து, சூடான தோசைக் கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
சப்பாத்திகள் ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால் மென்மையான ஜவ்வரிசி சப்பாத்தி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |