உங்க வீட்ல கறிவேப்பிலை செடி இருக்கா? அப்போ “இத”முதல்ல செய்ங்க
பொதுவாக இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக கறிவேப்பிலை பார்க்கப்படுகின்றது. இந்த செடியில் உணவிற்கு மணம் தருவதுடன் உடலுக்கு தேவையான கனிமங்களையும் தருகின்றது.
சிலர் கறிவேப்பிலையை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செடி வைத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்க்கும் பொழுது சிலர் வீட்டிலுள்ள செடிகள் இலகுவில் காய்ந்து போகின்றன.
கறிவேப்பிலை செடி காய்ந்து போகாமல் இருப்பதற்காக பெருங்காயம் மற்றும் புளித்த மாவையும் கரைத்து ஊற்றுவார்கள். இது உரமாக மாறி செடியை செழிப்பாக வளர வைக்கும்.
உங்கள் வீட்டில் இருக்கும் கறிவேப்பிலை செடி சரியாக வளரவில்லை என கவலைப்படாமல் கீழுள்ள சில டிப்ஸ்களை செய்து பார்க்கலாம்.
அப்படியாயின் கறிவேப்பிலை செடியை நன்றாக வளர வைக்கும் குறிப்புகளை தொடர்ந்து கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
கறிவேப்பிலை வளர்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை
1. மாடித்தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கறிவேப்பிலை வளர்க்கும் பொழுது சரியான நேரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
2. வெளியே வாங்கப்படும் கறிவேப்பிலைகளில் அதிகளவிலான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் ஏகப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அவ்வாறு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் கறிவேப்பிலையை நன்றாக உப்பு மற்றும் மஞ்சள் போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
3. சமையல் மட்டுமின்றி Hair care மற்றும் Skin care போன்றவற்றிலும் கறிவேப்பிலை முக்கிய இடத்தை பிடிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், கறிவேப்பிலை வீட்டில் வளர்த்து பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
4. பனி காலங்களில் கறிவேப்பிலையை இலை புள்ளி நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் வேப்பெண்ணெய்யை கறிவேப்பிலை மீது தெளித்து விட வேண்டும்.
5. சில கொடி புழுக்கள் கறிவேப்பிலை வளர்ச்சியை தாக்கும். அதற்கு வீட்டில் உள்ள புளித்த மோர் ஒரு கிளாஸ் எடுத்து, அத்துடன் 10 கிளாஸ் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். இது செடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |