உடல் எடையை விரைவில் குறைக்கணுமா? அப்போ இந்த விடயங்களை வழக்கமாக்கிக்கோங்க!
பொதுவாக அனைவருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது மனமும் உடலும் பெரும்பாலான சமயங்களில் அதற்கு ஒத்துழைப்பது கிடையாது.
சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்காத பட்சத்தில், அது பாரிய ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அனைவரும் அதனை அறிந்திருக்கின்ற போதிலும் முறையான தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு , மனஅழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக உடல் எடையை கட்டுக் வைத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என விரும்பினால் முதலில் மாற்றியமைக்க வேண்டியது நமது உணவு பழக்கத்தை தான். அந்த வகையில் விரைவில் உடல் எடையை குறைக்க முக்கியமாக பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரக தண்ணீர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சீரக தண்ணீரை குடிப்பது உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் துணைப்புரியும்.
அது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் தேவையற்ற கொழுப்பை கரைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் இது செரிமான அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றது.
ஆரோக்கியமான உணவு
வேலை நேரத்தில் ஏற்படும் குட்டி பசியை போக்குவதற்கு பலரும் எண்ணெயில் பொரித்த ஆரோக்கியமற்ற உணவுகளையே பெரும்பாலும் தோர்வு செய்கின்றனர்.
இது உடல் எடை அதிகரிப்பை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கு பதிலாக உலர் பழங்கள் மற்றும் பழங்கள், நட்ஸ் என ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்வது உடல் எடையை விரைவில் குறைக்க உதவுகின்றது.
50 நிமிட உடற்பயிற்சி
தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேவை செய்வதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
அதில் முக்கியமாக விடயம் தான் உடல் எடை அதிகரிப்பு. எனவே தினசரி குறைந்தது 50 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இது அதிக கலோரிகளை எதித்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.
கிரீன் டீ
வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைப்பதிலும் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேட்டசின்கள் அதிகம் இருப்பதால் , ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரீன் டீயை பருகுவதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் விரைவில் உடல் எடையை கட்டுக்கள் கொண்டுவர முடியும்.
சர்க்கரையை குறைப்பது
உடல் எடையை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கு சர்க்கரைக்கு காணப்படுகின்றது. எனவே சர்க்கரை பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்ப்பதன் மூலம் விரைவில் உடல் எடை இழப்பை அதிகரிக்க முடியும்.
தரமான தூக்கம்
உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. போதியளவு தூக்கமின்மையும் உடல் எடை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினசரி குறைந்த பட்சம் 7 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் இன்றியமையாதது.
அதனை முறையாக பின்பற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் உடல் எடையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர துணைப்புரியும்.
மேலும் நாளொன்றுக்கு தேவையாக அளவு தண்ணீரை அருந்துவது மற்றும் இரவு உணவுக்கு பின்னர் குறைந்தது 20 நிமிட நடைப்பயிற்சி போன்ற விடயங்களை முறையாக பின்பற்றினால் உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |