வெண்படலத்தை குணப்படுத்தும் கொத்தமல்லி தொக்கு... வெறும் 15 நிமிடத்தில் செய்யலாம்!
பொதுவாகவே வைச சமையல் என்றாலும் சரி அசைவ சமையல் என்றாலும் சரி அதில் கொத்தமல்லி முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் அதன் தனித்துவமான மணமும் சுவையும் தான். அன்றாட உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் காணப்படுகின்றது.
கொத்தமல்லி இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.
மேலும், கொத்தமல்லி இன்சுலின் சுரப்பைத் தூண்டி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் செய்கிறது. கண்ணில் ஏற்படும் வெண்படலத்தை குணப்படுத்தவும் கொத்தமல்லி உதவுவதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இத்தனை அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த கொத்தமல்லியை வைத்து வெறும் 15 நிமிடத்தில் சுவையான தொக்கு எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து இந்த பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 15
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கல் உப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - 1 கட்டு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு வெந்தய பொடி - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடுகு மற்றும் வெந்தயத்தை போட்டு வறுத்து இறக்கி சிறிது நேரம் குளிரவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதே பாத்திரதை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் புளி, கல் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து 3 தொடக்கம் 4 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கிவிட்டு இறக்கி குளிரவிட வேண்டும்.
நன்றாக ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்ததை சேர்த்து, மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வதங்கவிட வேண்டும்.
எண்ணெய் பிரியத் ஆரம்பித்த பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கடுகு வெந்தய பொடியை சேர்த்து கிளறி, இரண்டு நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட்டு இறக்கினால் இவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |