உலகில் அதிகமான மலைகள் கொண்ட நாடு எது தெரியுமா?
உலகில் மிகவும் அதிகமான மலைகளை கொண்ட நாடகள் எவை என்பதை பதிவில் பார்க்கலாம்.
அதிகமான மலை கொண்ட நாடுகள்
1. நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் அங்கு 7000 மீட்டருக்கு மேல் 100-க்கும மேற்பட்ட மலைகள் உள்ளன.
இதனால் உலகின் உயரமான சிகரங்களின் தாயகமாக நேபாளம் கருதப்படுகிறது.
2. அதிக மலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.
இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள், பனி மூடிய சிகரங்கள் என ஏராளமான இயற்கை வளங்கள் இந்தியாவில் கொட்டிக் கிடக்கின்றன.
இந்த மலைகள் பலவற்றிற்கு இயற்கை அரணமாகவும் வாழ்வாதாரங்களாகவும் இருக்கின்றன என கூறப்படுகின்றது.

3. சீனா இந்த பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது.
இங்கு திபெத்திய பீட பூமி மற்றும் தியென் ஷான் ஆகிய மிகப்பெரிய மலைத் தொடர்கள் உள்ளன.
எவரெஸ்ட் சிகரம் நேபாளம் மற்றும் சீனா எல்லையில் அமைந்திருக்கிறது.
இது தவிர பல உயரமான சிகரங்களை கொண்ட நாடாகவும் சீனா அறியப்படுகின்றது.

4. பாகிஸ்தானிலும் குறிப்பிடத்தக்க மலைத் தொடர்கள், சிகரங்கள் உள்ளன.
கில்கிட் – பால்டிஸ்தான், K2 போன்ற மலைத் தொடர்கள் பிரபலமாக உள்ளன.
மலையேற்ற விரும்பிகளுக்கு கரகோரம் மலைத் தொடர் முக்கியமான ஸ்பாட்டாக உள்ளது.

5. சுவிட்சர்லாந்து நாட்டை ஐரோப்பாவின் கூரை என்று அழைக்கிறார்கள்.
இதற்கு காரணம் அங்கு ஏராளமான மலைப் பகுதிகள் உள்ளதுதான்.
பனிச்சறுக்கு, மலையேற்ற ஆர்வலர்களுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது சுவிட்சர்லாந்து.
இங்கு பனியில் மூடப்பட்ட அழகிய மலைத்தொடர்கள் காணப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |