கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கணுமா? இதையெல்லாம் பண்ணுங்க
உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமாக உறுப்பு என்றால் அது கண் தான். நமது கண்கள் ஒரு சிக்கலான உணர்ச்சி உறுப்பு, மற்றும் நமது பார்வை என்பது நாம் வைத்திருக்கும் மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று என்றால் மிகையாகாது.
பார்வை எவ்வளவு முக்கியம் என்பது அதை இழந்தவர்களுக்கும் பார்வை இல்லாதவர்களுக்கும் மாத்திரமே தெரியும்.எனவே கண்கள் குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
கோடையில் ஏற்படும் அதீத வெப்பத்தால், கண்கள் மற்றும் சருமம் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால், அதிகமான சூரிய கதிரை கண்கள் மற்றும் தோல் தாங்குவதில்லை.
எனவே, உங்கள் கண் பராமரிப்பு அல்லது உங்கள் கண்களுக்கு சரியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
வெயில் காலத்தில் கண்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வெயில் காலத்தில் கண்களை பாதுகாக்க...
வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் சூரியக்கதிர்கள் கண்களில் காயத்தை ஏற்படுத்தி நாளடைவில் பார்வை குறைபாடு மற்றும் கண் சார்ந்த தொற்றுக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே வெளியில் செல்லும்போது கண்களை பாதுகாக்கும் வகையில் தரமான கருப்பு கண்ணாடி அணிவது,வெளியே சென்று வந்தவுடன் கண்களை சுத்தமான நீரால் கழுவுவது போன்ற விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
மேலும் ஏசி அறையில் இருந்தாலும் அடிக்கடி கண்களை கழுவ வேண்டியது அவசியம். கண்களை கைகளால் அழுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கண் சம்பந்தமான தொற்றுக்கள் பரவும் அபாயம் குறைவடையும்.
கண்கள் வெயில் காரணமாகவும் அதிக நேரம் ஏசி அறையில் இருப்பதனாலும் வறட்சியடையும் அதனை தவிர்க்க அடிக்கடி கண்களை குளிர்ந்த நீரினால் கழுவுதல் மற்றும் போதுமான சொட்டு மருந்து போட்டுக் கொள்வதன் மூலம் ஈரப்பதத்துடன் வைத்து கண்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக கம்ப்யூட்டர், செல்போன் பாவிப்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை மூடி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மேலும் தூரத்தில் உள்ள பொருட்களை பார்ப்பதும் கண்களுக்கு ஓய்வாக இருக்கும்.
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது குளோரின் கலந்த நீர் கண்களில் படாமல் கண்களுக்கு கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டும்.
வெயில் காலத்தில் சிகரெட் பிடிப்பது பார்வை குறைப்பாட்டை விரைவில் ஏற்படுத்திவிடும். அது மட்டுமன்றி கண்கள் வறட்சியடைய இது முக்கிய காரமாகும்.
காண்டாக்ட் லென்ஸ் வைக்கும்போதும் கழற்றும்போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது முக்கியம்.
மேலும் வெயில் காலத்தில் போதுமான அளவு பழங்கள் நீர்மோர் இளநீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது உடலையும் கண்களையும் எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |