ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Vinoja
Report this article
ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தில் முதலில் தெரிவான நடிகர் மற்றும் நடிகை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எந்திரன்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து சூப்பர்ஹிட் அடித்த படம் எந்திரன். அந்த படத்தில் ரஜினி சயின்டிஸ்ட் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு பாத்திரங்களில் நடித்து இருப்பார்.
உலகெங்கிலும் பல மொழிகளில் வெளியான எந்திரன் திரைப்படம் பிரம்மாண்ட ஹிட் அடித்தது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் இன்றும் புத்துணர்வு குறையாமல் இருக்கின்றது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த எந்திரன் திரைப்படம் வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது.
எந்திரன் ஹிட் ஆன பிறகு அதே கூட்டணியில் 2.0 படம் அதை விட அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ப்ரீத்தி சிந்தா ஆகியோர் தான் நடிக்க இருந்தனர், ஆனால் சில காரணங்களால் ஹீரோ ஹீரோயின் மாறி அதில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்தனர்.
இயக்குனர் ஷங்கர் 90 களிலேயே எந்திரன் படத்தை எடுக்க முடிவு செய்திருந்தாராம்.பின்னர் 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எந்திரன் படத்தில் நடிக்க ஷங்கர் கமல் ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவையும் தேர்வு செய்து இருவரையும் வைத்து படத்திற்கான போட்டோஷூட்டையும் எடுத்துவிட்டாராம்.
பின்னர் கமல் ஹாசன் வேறு படங்களில் கமிட் ஆகி இருந்ததால் இந்த படம் கைவிடப்பட்டு மீண்டும் ஜூன் 2007 ஆம் ஆண்டு எந்திரன் படத்தில் ஹீரோவாக நடிக்க ஷாருக் கானையும் ஹீரோயினாக ப்ரியங்காசோப்ராவையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.இதுவும் சில காரணங்களால் தடைப்பட்டதாம்.
பின்னர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரையும் தேர்வு செய்து படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் கமல்ஹாசனை வைத்து எந்திரன் படத்திற்கு ஷங்கர் எடுத்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |