உங்களை மரியாதை குறைவாக நடத்தினால் என்ன செய்யணும் தெரியுமா? உளவியல் ஆலோசனை
பொதுவாகவே அனைவருக்கும் தன்மானம் என்பது மிகவம் முக்கியமாக விடயம். எந்த வயதினராக இருந்தாலும் சரி, செல்வத்தின் அடிப்படையில் ஏற்றதாழ்வு இருந்தாலும் சரி சுய மரியாதை மற்றும் கௌரவம் என்பது அனைவருக்குமே பொதுவாக விடயம் தான்.
அந்தவகையில் ஒருவரை, இன்னொருவர் அசிங்கப்படுத்துவதோ மரியாதை குறைவான பேசுவதோ முற்றிலும் தவறான விடயம் இவ்வாறு உங்களை யாராவது பொது இடத்திலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ மரியாதை குறைவாக நடத்தினால் உங்களின் துலங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து சில உளவியல் ஆலோசனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிதானம்
உங்களை யாராவது அவமானப்படுத்தும் வகையில் பேசினாலோ அல்லது தன்னாமனத்தை சீண்டும் வகையில் செயற்பட்டாலோ, உடனடியாக கோபம், துக்கம் அல்லது ஏமாற்றத்தை ஒருபோதும் வெளிப்படுத்தவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
ஒரு நிமிடம் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். பதில் பேசும் முன்பு பல முறை யோசித்து பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை உடனடியாக வெளிப்படுத்துவது உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளவர்களுக்கு வெற்றியை கொடுத்துவிடும்.
உங்களுக்கும் அந்த நபருக்குமான உறவு
யார் என்றே தெரியாதவர்கள் அசிங்கப்படுத்தும் வகையில் பேசும் போது அவரிடம் எந்த வகையில் விளக்கம் கொடுத்தாலும் அது வீண்தான்.
ஆனால் உங்களுக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் உங்களை அடிக்கடி அசிங்கப்படுத்த முயல்கின்றார்கள் என்றால் அவர்களிடம் பொறுமையாக எடுத்து சொல்லி பரிய வைக்க பாருங்கள்.
அவர்கள் தொடர்ச்சியாக அவ்வாறு செய்தால் அவர்களிடம் இருந்து விலகி விடுங்கள். நீங்கள் தேவை என நினைக்கும் யாரும் உங்கள் தன்மானத்துடன் ஒருபோதும் விளையாட மாட்டார்கள். இப்படியானவர்களுக்கு விளக்கம் கொடுப்பதை விடவும் விலகி இருப்பது சிறந்தது.
கேள்வி கேளுங்கள்
அடிக்கடி உங்களை யாராவது அவமானப்படுத்த முயற்ச்சிக்கின்றார்கள் என அறிந்தால் “என்னை மரியாதை குறைவாக பேசி அசிங்கப்படுத்த நினைக்கிறீர்களா?” என கேட்டு பாருங்கள் இது அவர்களை நிச்சயயம் அதிர்ச்சியடைய செய்துவிடும். அதன் பின்னர் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
இல்லையென்றால் அவர்கள் குறிப்பிடுவதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாதத போல் நீங்கள் உங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்துவிடுங்கள். இது இவ்வாறான பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |