தலைமுடி பிரச்சினைக்கு 30 நாளில் தீர்வு கொடுக்கும் சாறு.. ஒரு தடவை போட்டு அலசுங்க போதும்
பெண்களுக்கு முடி தான் அழகு. ஒவ்வொரு பெண்ணும் நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
முடி உதிர்தல் பிரச்சினைகளைத் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நாம் உணவில் கவனம் செலுத்தாத வரை, கூந்தலின் வேர்களை வலுவாக்கவும் முடியாது. அதே போன்று ஆரோக்கியமான கூந்தலையும் பெற முடியாது.
முடி உதிர்தல் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரும் ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் உச்சந்தலை எவ்வளவு முடியை இழக்கிறதோ அவ்வளவு வளர்கிறதா? என பரிசோதித்து பார்க்க வேண்டும்.
உச்சந்தலையை வலுப்படுத்தவும் முடியை வளர்க்கவும் உருளைக் கிழங்கு சாறு உதவியாக இருக்கும் என கை வைத்திய முறைகள் கூறுகின்றன.
அந்த வகையில், தலைமுடி பிரச்சினைக்கு தீர்வு தரும் உருளை கிழங்கு சாற்றை எப்படி தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உருளைக் கிழங்கு சாறு
- உருளைக் கிழங்கு வேக வைத்த தண்ணீரை ஆற வைத்து தலைமுடி அலசப் பயன்படுத்த வேண்டும்.
- அதில் உள்ள புரோட்டீன் அளவு மோசமாக இருக்கும் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்கிறது.
- உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் முடிக்கு பளபளப்பையும் பொலிவையும் தருகிறது. இது முடி வறட்சியையும் தடுக்கும். இது சிறந்த கண்டிஷ்னராகவும் செயல்படும்.
- தலைக்கு வழக்கமாக ஷாம்பு போட்டு குளித்த பின் இந்த உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் தலையை அலச வேண்டும்.
- இறுதியாக வெறும் தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளலாம்.
- இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |