உங்களுக்கு ஒற்றைத் தலைவலி இருக்கா? அப்போ கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க
பொதுவாகவே ஒற்றைத் தலைவலி என்பது நெற்றியின் ஒரு பக்கத்தில் இருக்கும் தலைவலி மற்றும் துடிப்பது போன்ற உணர்வு மெதுவாகத் தொடங்கி, அதிகரித்து, அதிகபட்ச தீவிரத்தை அடைந்து, தலையை ஒரு சுழற்று சுழற்றி எடுத்து விட்டுத்தான் குறையும்.
சில சமயங்களில் குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகளும் தோன்றலாம். ஆனால் இவை சிறிது நேரம் ஓய்வெடுப்பதன் மூலமோ அல்லது உறங்குவதன் மூலமோ தானாகவே குறைந்துவிட வாய்ப்புள்ளது.
அந்தவகையில், இந்த ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்கள் சில உணவுகளைத் தொடவேக் கூடாதாம்.
தவறாமல் செய்ய வேண்டியது
ஒரு சிலருக்கு இந்த ஒற்றைத் தலைவலி வருவது சரியான தூக்கமின்மையால் தான். ஆகவே தினமும் 8 மணிநேரம் தூங்குவது நல்லது.
காலையில் எழுந்தவுடன் தினமும் ஒரே நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த ஒற்றைத் தலைவலியைக் குறைக்கலாம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும். இந்தவேளையில் தவறாமல் மருத்துக்களை எடுத்துக் கொள்வது நல்லது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஒற்றைத் தலைவலியால் இருப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடவே கூடாது
சீஸ், புளித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது
சேமித்து வைத்த கீரைகளை சாப்பிட கூடாது
சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும்
காபி குடித்தால் அதில் காபின் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்
செயற்கை இனிப்பை தவிர்க்க வேண்டும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |