ஒற்றை தலைவலியால் கடும் அவதியா? 2 நிமிடத்தில் சரிசெய்யலாம்;
தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சினையாகும். தலைவலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. இதற்குநரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.
இந்த ஒற்றை தலைவலி பல நாட்கள் வரை சிலருக்கு நீடிக்கிறது. ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.
தயிரை உணவில் சேர்த்து கொள்வதால் செரிமானம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை நீக்குவதோடு, நீரிழப்பைக் கட்டுப்படுத்தி தலைவலி ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
அடுத்ததாக மூலிகை தேநீர். இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது. ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் இது கூடவே பல நன்மை பயக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. புதினா இலை சேர்த்த தேநீர் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்தும்.
கடல் மீனில் போதுமான அளவு ஒமேகா 3 உள்ளதால், உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடல் உணவில், குறிப்பாக மீன் உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள நிலையில், இது ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.