ஒற்றைத் தலைவலியால் அதிகம் அவதிப்படுகிறீர்களா? உடனே குணமாக்கும் வீட்டு வைத்தியம்
பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பக்கத் தலைவலி என்ற பேச்சு சற்று அதிகரித்தே வருகின்றது. இதனை சாதாரண தலைவலி என்று சிலர் இதற்கான வைத்திய ஆலோசனைகளை பெறாமல் இருக்கின்றார்கள்.
ஆனால் ஒற்றைத் தலைவலிக்கு அதீத கவனம் தேவை. மேலும் இதனை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டும் குணப்படுத்த முடியும்.
ஒற்றைத்தலைவலி
பொதுவாகவே ஒற்றைத் தலைவலி என்பது நெற்றியின் ஒரு பக்கத்தில் இருக்கும் தலைவலி மற்றும் துடிப்பது போன்ற உணர்வு மெதுவாகத் தொடங்கி, அதிகரித்து, அதிகபட்ச தீவிரத்தை அடைந்து, தலையை ஒரு சுழற்று சுழற்றி எடுத்து விட்டுத்தான் குறையும்.
சில சமயங்களில் குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகளும் தோன்றலாம். ஆனால் இவை சிறிது நேரம் ஓய்வெடுப்பதன் மூலமோ அல்லது உறங்குவதன் மூலமோ தானாகவே குறைந்துவிட வாய்ப்புள்ளது.
இவை மரபு மற்றும் சூழல் ஆகிய இரண்டு அம்சங்களும் தான் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்த மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றது.
வீட்டு வைத்தியம்
ஒற்றைத் தலைவலிக்கு மிகச் சிறந்த வைத்தியம் தான் இஞ்சி. இஞ்சியில் நீர்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, விட்டமின் சி , போன்றவைகள் இருக்கின்றது. சோடியம், இரும்புச்சத்து, கல்சியம் ,பொற்றாசியம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை போன்றவைகள் இஞ்சியில் இருக்கின்றது.
மேலும், இஞ்சியைக் கொண்டு எவ்வாறு ஒற்றை தலைவலியை சரிசெய்யும் முறை. செய்முறை முதலில் இஞ்சியை தோலுடன் சேர்த்து நன்கு சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒற்றை தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.
தலைவலி குறையாமல் அதிகரித்து வந்தால் இஞ்சியை நன்கு அரைத்து அந்த விழுதினை தலையில் பத்து போட வேண்டும். மேலும், இந்த தலைவலியை ஆரம்பத்தில் சரி செய்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கண்பிரச்சினைகளும் ஏற்படும்.