குதிகால் வலியால் தொடர்ந்து அவதியா? அனைத்து வலியும் பறந்து போக இதை செய்திடுங்க
பொதுவாக பெண்களுக்கு கால்சியம் சத்துக்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதால் குதிகால் வலி ஏற்படுகிறது.
இதனால் தான் மருத்துவர்கள் பெண்களுக்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுமாறு கூறுவார்கள்.
பெண்களின் வேலைகள் அதிகமாக இருப்பதால் அதனை கவனித்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை கவனிக்க மறந்து விடுவார்கள். ஆனால் இதனால் நாளடைவில் அவர்கள் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்று விடுகிறது.
அதுவும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த குதிகால் வலியால் பாதிக்கப்படுவார்கள். இந்த வலியால் அவர்களின் வேலைகளை செய்து கொள்ள முடியாத ஒரு நிலைக்கு ஏற்படுகிறது.
மேலும் அதிக உடை மற்றும் தவறான பாதணிகள் அணிதல் உள்ளிட்ட காரணங்கள் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
தன்னுடைய உயரத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்ற நோக்கில் தற்போது இருக்கும் பல பெண்கள் ஐ ஹீல்ஸ் அணிவார்கள்.
ஆனால் இந்த பழக்கம் நாளடைவில் முள்ளந்தண்டுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் முட்டு வலிகள் ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
இதனை தொடர்ந்து இரத்தில் யூரிக் எனப்படும் ஒரு வகை அமிலம் அதிகமாக இருந்தாலும் இந்த குதிகால் வலி ஏற்படும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் குதிகால் வலி ஏன் வருகிறது? அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது குறித்து தொடர்பில் தெளிவாக கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.