கால்சியம் சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் 10 உணவுகள்! என்னென்னனு தெரியுமா?
உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களில் ஒன்று தான் கால்சியம். எலும்பு வளர்ச்சிக்கும், உறுதிக்கும் முக்கியமானது. நமது உடலின் 99 சதவீதம் கால்சியம் எலும்பு மற்றும் பற்களில் தான் செறிந்திருக்கின்றது.
உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், தசைகளின் இயக்கத்திற்கும், இதய துடிப்பு சீராக இருக்கவும் கால்சியம் அவசியம் தேவை.
ஆனால் தினமும் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு ஈடாக கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம்.
50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராமும், 50 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1200 மில்லி கிராமும், 70 வயதுக்கு கீழ் உள்ள ஆண்களுக்கு 1000 மில்லி கிராமும், 71 வயதுக்கு அதிகமான ஆண்களுக்கு 1200 மில்லி கிராம் கால்சியமும் தேவைப்படுகின்றது.
இந்நிலையில் கால்சியம் நிறைந்த உணவுகளின் பட்டியலை இங்கு காணொளியில் காணலாம்