காலின் அழகைக் கெடுக்கும் குதிகால் வெடிப்புக்கு முற்றுப்புள்ளி! இதோ சூப்பர் டிப்ஸ்
பொதுவாக ஆண்,பெண் என இருபாலாருக்கும் குதிகாலில் வெடிப்பு காணப்படும்.
இந்த வெடிப்புக்கள் முறையான பராமரிப்பு இன்மையாலும், அதிக வேலைப்பழு காரணமாகவும் ஏற்படுகிறது.
இப்படியான பிரச்சினைகளை வைத்தியரிடம் செல்லாமல் வீட்டில் உள்ளப் பொருட்களை வைத்து எவ்வாறு சரிச் செய்துக் கொள்ளலாம் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
உங்கள் கால்களில் வெடிப்பு இருக்கிறதா?
கால்களில் வெடிப்பு ஏற்படும் பொழுது, சிறிய பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கால்களை பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்துக் கொள்ள வேண்டும். வெடிப்புகள் உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புக்கள் குறையும்.
மேலும் வெடிப்புக்கள் உள்ள இடத்திற்கு இரவு நேரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து மசாஜ் செய்து வந்தால் வெடிப்புக்களின் தாக்கம் குறையும்.
கால்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதனால் வெடிப்பு ஏற்படுகிறது. இதனால் பாதங்களில் பிளவுகள் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது இவ்வாறான பிரச்சினைகளை சரிச் செய்வதற்கு பாதங்களில் இயற்கையாக இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கால்களுக்கு பாதணி அணியாமல் வெளியே செல்வதனால் கற்கள் மற்றும் துாசுக்களினால் சேதம் ஏற்படலாம். அவ்வாறு வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வெளியில் சென்று வீடு திரும்பிய போது வெந்நீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.