உதடு கருப்பா இருக்கா? ஒரே வாரத்தில் இளஞ்சிவப்பு நிறமாக மாற இந்த வீட்டு வைத்தியம் போதும்
பொதுவாகவே பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு காணப்படுகின்றது.
மேலும் பெண்களில் அதிகமானோர் தங்கள் உதடுகளின் அழகை மேம்படுத்த லிப்ஸ் டிக் பூசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு தகவல் குறிப்பிடுகின்றது.
சிலருக்கு வளிமண்டல மாசு காரணமாகவும் சூரிய ஒளி, காலநிலை மாற்றம் காரணமாகவும் உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்துவிடும்.இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இதற்கு தீர்வு கொடுக்கும் பல்வேறு உற்பத்திகள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதில் காணப்படும் ரசாயன பொருட்களால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுகின்றது.
இந்த பிரச்சினையை உடனடியாக சரிச் செய்து உதடுகளை மென்மையாகவும் சிவப்பாகவும் மாற்ற வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களைக் கொண்டு எவ்வாறு லிப் ஸ்க்ரப் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெற...
முதலில் ஒரு கிண்ணத்தில் ரோஜா பூ இதழ்களை பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 1 அல்லது 2 தே. கரண்டி தேன் கலந்து அதை உதட்டில் தடவி 2 முதல் 3 நிமிடங்களுக்கு லிப் ஸ்க்ரப் போல மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் 3 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் உங்கள் கருப்பான உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிவருவதை கண்கூடாக அவதானிக்கலாம்.
ரோஜா பூ சருமத்தின் pH அளவை சீராக வைத்துக்கொள்வதுடன் சரும செல்களுக்கு உள்ளிருந்து ஊட்டமளித்து கருமையை இயற்கையாகவே சீர் செய்ய துணைப்புரிகின்றது. மேலும், இது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.
தேன் இயற்கையாகவே இறந்த சரும கலன்களை வெளியேற்றுவதற்கு துணைப்புரிகின்றது. மேலும் உதடுகளை மென்மையாக நீரேற்றத்துடனும் வைத்திருக்க உதவுகின்றது. இவை இரண்டும் இயற்கையான பொருட்கள் என்பதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |