பத்தே நிமிடத்தில் ருசியான கத்திரிக்காய் சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே கத்தரிக்காயை வைத்து பலவிதமான முறையில் குழம்பு செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் கத்தரிக்காயில் சட்னி செய்யலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை.
இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக பொருந்தக்கூடிய கத்தரிக்காய் சட்னியை எவ்வாறு செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் - 1
புளி - 1 சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 3
பூண்டு - 4
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் கத்தரிக்காய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்றாக வதக்கி தனியாக எடுத்து ஆறவிட வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் கத்தரிக்காய் , சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியற்றை சேர்த்து நன்றாக வத்க்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் புளியை சேர்த்து நன்றாக வதக்கி கீழே இறக்கி ஆறவைக்க வேண்டும்.
பின்னர் ஆறவைத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்ததால் சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |