Fish Fry இப்படி மசாலா அரைத்து செய்து பாருங்க... ருசி வேற லெவல்
வித்தியாசமான முறையில் மீன் வறுவல் ப்ரெஷ்ஷான மசாலா அரைத்து எவ்வாறு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் மீன் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆம் கடல்வகை உணவுகள் சுவையில் தாறுமாறாகவே இருக்கும்.
அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறு குழந்தைகள் கூட பொரித்த மீன் என்றால் போட்டி போட்டு சாப்பிட்டு தீர்த்துவிடுவார்கள்.
மீன் பொரிப்பது பல விதங்களில் மசாலா அரைத்து தயார் செய்வார்கள். தற்போதும் ப்ரெஷாக மசாலா அரைத்து காரசாரமாக மீன் வறுவல் செய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மீன் - 3
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 3 பல்
இஞ்சி - ஒரு துண்டு
காஷ்மீர் மிளகாய் - 3
கறிவேப்பிலை- 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை - அரை
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
முதலில் மீன்களை நன்றாக சுத்தம் செய்து வெட்டாமல் அப்படியே எடுத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜார் ஒன்றில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி, காஷ்மீர் மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள், எலுமிச்சை சாறு இவற்றினை சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனின் மீது மசாலாவை நன்றாக தடவிக் கொள்ளவும். மசாலா தடவிய பின்பு ப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து ஊறவிடவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் காய வைத்து, அதில் நாம் மசாலா தடவி ஊற வைத்த மீன்களைப் போட்டு பொரித்து எடுத்தால், அட்டகாசமான மீன் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |