பெண்களே உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வையுங்கள்!
உணர்வுகள் என்பது அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒன்றாகும். இந்நிலையில் பெண்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். மனமானது எப்பொழுதும் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம்.
ஏனென்றால் நமக்கு வரும் வேலைகளை திறமையாக செய்து முடிக்கவும், சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும் மனம் குழப்பமின்றி இருப்பது மிகவும் அவசியம்.
எல்லா விடயத்துக்கும் சீக்கிரமாக உணர்ச்சிவசப் படக்கூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைப்பதற்கு எப்பொழுதுமே பழக வேண்டும்.
image - everypixel
நாம் எதிர்மறை சிந்தனைகளுக்கு முடியுமானவரையில் இடம் கொடுக்கக்கூடாது. சோகம், கோபம், வேதனை, மன அழுத்தம் போன்றவை எமது உணர்வுகளை தடுமாற வைத்துவிடும்.
எப்பொழுதும் நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். மனக்கவலை, சந்தோஷம் என்று எதுவாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது.
மன அழுத்தம் என்பது ஆரோக்கியத்துக்கு மிகப்பெரும் எதிரியாக காணப்படுகிறது. ஆரோக்கியமான உணவை உண்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது என்பது சமநிலையில் பராமரிக்க உதவும்.
நமது நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி, மகிழ்வதும் நமது ஆரோக்கியத்தை கட்டுப்படுத்த உதவும்.