பலாப்பழத்தில் பிசுபிசுப்பு ஒட்டாமல் ஈசியா எடுக்க சில டிப்ஸ்..! கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நாம் வாங்கி சாப்பிடும் பழங்களில் மிகவும் சுவையான பழங்களில் எடுக்கும் போது அதில் முதலில் வருவது பலாப்பழம் தான்.
இதன் தோல் எவ்வளவு கரடுமுரடாக இருந்தாலும் அதற்கு உள்ளே இருக்கும் பழத்தின் சுவையிற்கு இங்கு எந்த பழமும் இல்லை.
இந்த பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றது இதனால் பலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏகப்பட்ட நோய்கள் குணமாகிறது என மருத்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பழத்தை காயாக இருக்கும் போது கறியாகவும் பழமாக இருக்கும் போது பழமாகவும் சாப்பிடலாம். ஆனால் இதனை சுத்தம் செய்வது தான் டாஸ்க்கான ஒரு விடயம்.
மேலும் பலாப்பழத்தை சுத்தம் செய்வதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டு கடைகளில் சுத்தம் செய்து விற்கப்படும் பழத்தை வாங்குவார்கள்.
அந்த வகையில் பலாப்பழத்தை இலகுவாக சுத்தம் செய்வதற்கு சில டிப்ஸ்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பலாப்பழத்தை எப்படி ஈஸியாக சுத்தம் செய்வது?
1. பழத்தை எடுத்து வெறும் தரையில் வைக்காமல் கீழே செய்தி தாள் அல்லது டிசுவை விரித்து வைக்கவும். இல்லையென்றால் இதிலிருக்கும் பால் தரையில் ஊற்றி ஒட்ட ஆரம்பித்து விடும்.
2. கைகள் மற்றும் வெட்டும் கத்தியில் நன்றாக தேங்காய் எண்ணெயை பூசிக் கொள்ளவும். இப்படி செய்ய தவறினால் அதிலிருக்கும் ஒரு வகை பிசின் கத்தியை வீணாக்கி விடும். இரண்டு கத்திகள் பயன்படுத்த வேண்டும்.
3. கத்தி எனும் பார்க்கும் போது நன்றாக கூர்மையான கத்தியை பயன்படுத்த வேண்டும். பலாப்பழத்தை இடையாக வெட்டுவதை விட நீளமாக வெட்டுவது சிறந்தது.
4. கத்தியில் அதிகம் கூர்மை இருப்பதால் கத்தி நழுவாமல் இருப்பதற்கு டிசுவை கையிலும் கொஞ்சம் வைத்திருக்க வேண்டும்.
5. இரண்டாக பிளந்த பின்னர் பழத்தின் நடுவில் இருக்கும் பிசுக்களை பேப்பரினால் ஒற்றி எடுத்து கொள்ள வேண்டும். தேங்காய் தடவி எடுத்தால் ஈஸியாக எடுத்து விடலாம்.
6. ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் பலாப்பழ சுலைகளை போட வேண்டும். எல்லாம் செய்து முடித்த பின்னர் அதனை சரியாக வெளியேற்றம் செய்து விட வேண்டும். கைகளில் இருக்கும் பிசுபிசுப்புகளை பேப்பரில் ஒற்றி எடுத்து கொள்ளவும்.